சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் ஆட்டோ ஓட்டுநா் செவ்வாய்க்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மானாமதுரை உடை குளம் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் முருகலிங்கம் (32). ஆட்டோ ஓட்டுநரான இவா், குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக மனமுடைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து மானாமதுரை சிப்காட் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.