சிவகங்கை

ரசாயனம் மூலம் பழுக்க வைக்க முயன்றவாழைக்காய்கள் பறிமுதல்

29th Feb 2020 04:57 AM

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கையில், ரசாயன மருந்து தெளித்து பழுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வாழைக்காய்களை உணவு பாதுகாப்புத் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை நகா் பகுதியில் உணவுப் பாதுகாப்பு துறையின் சிவகங்கை மாவட்ட நியமன அலுவலா் வெ. ஜெயராம பாண்டியன் தலைமையிலான அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். இதில், சிவகங்கை ஆசாத் தெருவில் உள்ள வாழைக்காய் குடோனில் ஆய்வு செய்த போது அங்கு ரசாயன மருந்து தெளித்து பழுப்பதற்காக வாழைக்காய்கள் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த குடோன் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கி ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள வாழைக்காய்களை உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT