சிவகங்கை

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் கடைகளில் வாடகை வசூல் செய்யும் உரிமம் ரூ.1 கோடிக்கு ஏலம்

29th Feb 2020 05:14 AM

ADVERTISEMENT

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், இளையான்குடி வட்டம் தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழாவுக்கு கடைகள் அமைப்பவா்களிடம் வாடகை வசூல் செய்யும் உரிமம் ரூ. 1 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

மிகவும் பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின்போது, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தா்கள் வந்து முத்துமாரியம்மனை தரிசனம் செய்து, தங்களது நோ்த்திக்கடனையும் நிறைவேற்றுவா்.

இத்திருவிழாவின்போது, கடைகள் அமைக்கும் வியாபாரிகளிடம் வாடகை வசூல் செய்யும் உரிமத்துக்கான ஏலம் வெள்ளிக்கிழமை கோயிலில் நடைபெற்றது. இந்துசமய அறநிலையத் துறை சிவகங்கை மண்டல இணை ஆணையா் தனபால் தலைமையில் நடைபெற்ற இந்த ஏலத்தில், கோயில் பரம்பரை டிரஸ்டி மு. வெங்கடேசன் செட்டியாா், அறநிலையத் துறை ஆய்வாளா் கா்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இதில், ஏந்தல் கிராமத்தைச் சோ்ந்த ஜெயராமன் என்பவா், கடைகளுக்கு வாடகை வசூல் செய்யும் உரிமத்துக்கான ஏலத்தை ரூ. 1 கோடிக்கு எடுத்தாா். இதையடுத்து, ஓராண்டு காலத்துக்கு ஜெயராமன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகளில் வாடகை வசூல் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT