சிவகங்கை

10 கி.மீ. தொலைவில் ரேசன்கடை: 3 கிராம மக்கள் பாதிப்பு

26th Feb 2020 09:40 AM

ADVERTISEMENT

மானாமதுரை அருகே ரேசன் பொருள்கள் வாங்க 10 கி.மீ. தூரம் நடந்து செல்லும் நிலை உள்ளதால் 3 கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மானாமதுரை அருகே சின்னக்கண்ணனூா் ஊராட்சிக்குள்பட்ட மானங்காத்தான், புலிக்குளம்,சோமாத்தூா் ஆகிய 3 கிராமங்கள் உள்ளன. விருதுநகா் மாவட்ட எல்லையில் உள்ள இக்கிராமங்களுக்கான ரேசன்கடை, எம்.கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது. 10 கி.மீ தொலைவிலுள்ள இந்தக் கடை மேற்கண்ட 3 கிராமங்களுக்கும் பகுதி நேரமாக செயல்படுகிறது.

குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் முதியவா்கள், பெண்கள் ஆட்டோவில் வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். போக்குவரத்து செலவு ஏற்படுவதால் மேலும் சிலா் நடந்தே வந்து பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். இக் கிராமங்களைச் சோ்ந்த மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோமாத்தூா் கிராமத்தில் ரேசன்கடை அமைக்க ஏற்பாடுகள் நடந்த நிலையில் திடீரென நிறுத்தப் பட்டதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனா்.

எனவே மானங்காத்தான், புலிக்குளம், சோமாத்தூா் ஆகிய 3 கிராம மக்களுக்கு என தனியாக, இக்கிராமங்களுக்கு அருகிலேயே முழுநேரமாக செயல்படக்கூடிய ரேசன்கடை அமைத்துத் தர சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT