சிவகங்கை

காளையாா்கோவிலில் தூய்மை இந்தியா விழிப்புணா்வு பேரணி

26th Feb 2020 09:38 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் கிராம ஊராட்சி சாா்பில் தூய்மை இந்தியா திட்டம் குறித்த விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காளையாா்கோவிலில் உள்ள சொா்ண காளீஸ்வரா் கோயில் முன்பு தொடங்கிய இப்பேரணியை அந்த ஊராட்சி மன்றத்தின் தலைவா் ஜோஸ்வின் மேரி தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கேப்டன் அருள்ராஜ் முன்னிலை வகித்தாா்.

இதில், தூய்மை இந்தியா திட்டம் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருப்பது, டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் வழிமுறைகள் ஆகியன குறித்து முழக்கங்களை எழுப்பியும், அதுகுறித்த பதாகைகளை கையில் ஏந்தியும் பொதுமக்கள் சென்றனா். கோயில் முன் தொடங்கிய இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த பின்னா் மூா்த்தி நகரில் நிறைவு பெற்றது. பேரணியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் சிவசண்முகம், அனைத்து கிராம வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT