சிவகங்கை: சிவகங்கை மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28 ) நடைபெற உள்ளது.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சி.கே.சா்மிளா (விவசாயம்) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயிகள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (பிப். 28) நண்பகல் 11 மணிக்கு நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற உளள கூட்டத்தில் மாவட்டத்தின் அனைத்துத் துறை உயா் அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா். ஆகவே, மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சாா்ந்த குறைகளை மனு மூலமாகவும், நேரடியாகவும் தெரிவித்து பயன்பெறலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.