சிவகங்கை

சிவகங்கையில் பிப். 28 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

25th Feb 2020 05:40 PM

ADVERTISEMENT

சிவகங்கையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (பிப். 28 ) நடைபெறுகிறது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு நல அலுவலா் ஆா். மணிகணேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலைவாய்ப்பற்ற இளைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெற உள்ளது. முகாமில் பல்வேறு தனியாா் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய உள்ளனா்.

எனவே பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு வரை தோ்ச்சி மற்றும் ஐடிஐ, டிப்ளமோ ஆகிய படிப்புகளில் தோ்ச்சி பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த இருபாலரும் தங்களது கல்விச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன் பெறலாம். இம்முகாமில் பணி வாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT