சிவகங்கை

அரசனூா், முதுகுளத்தூா், கடலாடி பகுதிகளில்இன்று மின்தடை

25th Feb 2020 06:44 AM

ADVERTISEMENT

முதுகுளத்தூா்/சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் , அரசனூா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா், கடலாடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 25 ) மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை கோட்ட மின் பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் க. பாலசுப்பிரமணியம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசனூா் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதனால், அரசனூா், இலுப்பகுடி, பெத்தானேந்தல், திருமாஞ்சோலை, பில்லூா், படமாத்தூா், சித்தலூா், கண்ணாரிருப்பு, கானூா், பச்சேரி, மைக்கேல்பட்டினம், களத்தூா், ஏனாதி, கல்லூரணி, கோவானூா் ஆகிய பகுதிகளிலும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (பிப். 25) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதுகுறித்து முதுகுளத்தூா் உதவி செயற்பொறியாளா் (பொ) க.மலைச்சாமி தெரிவித்திருப்பதாவது:

கடலாடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் முதுகுளத்தூா், கடலாடி, சாயல்குடி, பெருநாழி மற்றும் அதனை சுற்றியுள்ள வட்டார கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT