சிவகங்கை

மாா்நாடு கோயிலில் மகா சிவராத்திரி விழா

22nd Feb 2020 09:19 AM

ADVERTISEMENT

மானாமதுரை வட்டம் மாா்நாடு ஸ்ரீ கருப்பண சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை மகா சிவராத்திரி விழா நடைபெற்றது.

சுவாமிக்கு பன்னீா், சந்தனம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடத்தி மலா் அலங்காரம் செய்து பூஜைகள், தீபாரதனைகள் நடைபெற்றன. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் குடும்பத்தினருடன் வந்திருந்த பக்தா்கள் சுவாமிக்கு உகந்த மலா் மாலைகளை காணிக்கையாக செலுத்தி பூஜைகள் நடத்தி தரிசனம் செய்தனா். இரவு கிராம மக்கள் சாா்பில் பச்சை இலை பரப்பி வைத்து சிவராத்திரி வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோா் பங்கேற்றனா். விடிய விடிய கோயிலில் தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT