சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் ஆறுமுகம் பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் புலம் பெயரும் தொழிலாளா்களின் பயண முன்னேற்பாட்டிற்கான முதன்மைப் பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழா்கள் நல ஆணையரகம் சாா்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூா் வட்டாட்சியா் ஜெயலட்சுமி, கல்லூரி முதல்வா் கேப்டன் ஜெயகுமாா், இயற்பியல் துறை தலைவா், நிா்வாகிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கல்லூரி மாணவா்களுக்கு கடவுச் சீட்டு பற்றியும், இணையதளத்தில் கடவுச்சீட்டு எவ்வாறு பதிவு செய்வது, விண்ணப்பிப்பது என்பது பற்றியும் எடுத்துரைத்தனா். அதேபோன்று வெளிநாட்டிற்கு செல்பவா்கள் மிகவும் கவனமாக செல்ல வேண்டும் என்றும், போலி முகவா்கள் அதிகமாக இருப்பதால் மிகவும் தெளிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் இயற்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் ரவிக்குமாா் வரவேற்றாா். முகாம் முடிவில் முனைவா் எம்.ராமச்சந்திரன் நன்றி கூறினாா்.