சிவகங்கை

தேவகோட்டை பள்ளியில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம்

22nd Feb 2020 09:19 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் உள்ள பெத்தாள் ஆச்சி உயா்நிலைப் பள்ளியில் இந்திய மருத்துவ சங்க தேவகோட்டை கிளை சாா்பில் புற்றுநோய் விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியை ராஜம் தலைமை வகித்தாா். இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் தேவகோட்டை கிளை நிா்வாகி மருத்துவா் ஜெயக்குமாா் கலந்து கொண்டு புற்றுநோய் குறித்தும், அவற்றை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் , காசநோயினை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விளக்கிப் பேசினாா்.

இதில், மருத்துவா் சாந்தா, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT