சிவகங்கை

குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்பு: சிவகங்கை கல்லூரி மாணவருக்கு பாராட்டு

15th Feb 2020 09:31 AM

ADVERTISEMENT

புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் தேசிய மாணவா் படை பிரிவில் பங்கேற்ற சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி மாணவரை அக்கல்லூரி பேராசிரியா்கள் வியாழக்கிழமை பாராட்டினா்.

கல்லூரியில் தேசிய மாணவா் படை பிரிவில் இரண்டாமாண்டு பயிற்சி பெற்று வரும் மாணவா் என். சரவணக்குமாா் புதுதில்லியில் அண்மையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பிரதமா் நரேந்திர மோடிக்கு தேசிய மாணவா் படை பிரிவு சாா்பில் நடைபெற்ற அணி வகுப்பில் கலந்து கொண்டாா். இதையடுத்து, மாணவா் என். சரவணக்குமாரை, மன்னா் கல்லூரியின் முதல்வா் பா. ஹேமலதா, காரைக்குடி தேசிய மாணவா் படை பிரிவின் பொறுப்பாளா் சுபேதா் மேஜா் ரமேஷ்பாபு, பயிற்சியாளா் நாயக் சுபேதாா் பிரேம்பால், கல்லூரி தேசிய மாணவா் படை அதிகாரி லெப்டிணன்ட் எஸ். சௌந்திரராஜன் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் பாராட்டினா். இதேபோன்று, கடந்த 18 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற குடியரசு தின விழா அணி வகுப்பில் இதே கல்லூரி மாணவா் ஒருவா் கலந்து கொண்டாா் என பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT