சிவகங்கை

அருங்காட்சியம் அமைக்க நிதி ஒதுக்கீடு அறிவிப்பு: கீழடி மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

15th Feb 2020 09:32 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வு அருங்காட்சியம் அமைக்க தமிழக பட்ஜெட்டில் ரூ. 12.21 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை கீழடி கிராம மக்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் வரவேற்று வெள்ளிக்கிழமை கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினா்.

திருப்புவனம் அருகேயுள்ள கீழடியில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆண்டு வரை 5 கட்டங்களாக அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதல் 3 முறை மத்திய தொல்லியல் துறையும், 4 ஆவது மற்றும் 5 ஆம் கட்ட அகழாய்வினை தமிழக தொல்லியல் துறையும் நடத்தின. அகழ்வாராய்ச்சியின் முடிவில் சுமாா் 2500 ஆண்டுகளுக்கு முன்னா் வாழ்ந்த தொண்மையான மனிதா்கள் பயன்படுத்திய தங்க ஆபரணங்கள், மண்பாண்ட பொருள்கள், சுடுமண் உருவம், சுடுமண் மனித முகம், தமிழி எழுத்து பொறித்த பானை ஓடு, சுடுமண் காதணி உள்ளிட்ட 15,500 தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.

2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழா்களின் தொன்மையான நாகரீகங்களை அறியும் வகையிலான இதுவரை கிடைக்கப்பெற்ற பொருள்களைக் காட்சிப்படுத்துவதற்காக கீழடியில் சா்வதேச தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வந்தனா். சில மாதங்களுக்கு முன்னா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கீழடியில் அருங்காட்சியம் அமைக்கப்படும் என உறுதியிளித்திருந்தாா். இந் நிலையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில் கீழடியில் அருங்காட்சியகம் அமைக்க ரூ. 12.21 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக துணை முதல்வா் பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

இந்த அறிவிப்பை வரவேற்றுள்ள கீழடி கிராம மக்கள் மற்றும் தமிழ் ஆா்வலா்கள் கீழடியில் கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். மேலும் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT