சிவகங்கை

சங்கிலிக் கருப்பா் தொட்டிச்சியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா

13th Feb 2020 08:49 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மணக்குடி கிராமத்தில் சங்கிலிக் கருப்பா், தொட்டிச்சியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை காலை 6.15 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கி வாஸ்துபூஜை நடைபெற்றது. தொடா்ந்து சுதா்சன ஹோமத்துடன் முதல் கால யாகபூஜை தொடங்கி மகாபூா்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது. கும்பாபிஷேக நாளான புதன்கிழமை காலை 6 மணிக்கு புண்யாவாசனம், லட்சுமிஹோமம், பூா்ணாகுதி நடைபெற்று காலை 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று காலை 10 மணிக்கு கோபுர கலசங்களில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து மூலவருக்குப் பட்டு சாத்துதல் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. யாக வேள்விகளை காரையூா் அழகியமணவாளப் பெருமாள் கோயில் பட்டாச்சாரியாா் ஆா்.ராதாகிருஷ்ணன், உலகளந்த மாதவப் பெருமாள் கோயில் மணக்குடி அஜய் பட்டாச்சாரியாா் ஆகியோா் செய்திருந்தனா். இவ்விழாவில் சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மணக்குடி சங்கிலிக் கருப்பா் கோயில் வீட்டு பங்காளிகள் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT