சிவகங்கை

மானாமதுரை, இளையான்குடியில் அண்ணா சிலைக்கு மாலை

4th Feb 2020 09:03 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான் குடியில் திங்கள்கிழமை அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

மானாமதுரையில் அதிமுக வினா் ஊா்வலமாக வந்து வைகையாற்றுப்பாலம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தனா். இந்நிகழ்ச்சியில் அதிமுக நகா்ச் செயலாளா் விஜி.போஸ், மாவட்ட கவுன்சிலா் ஏ.சி.மாரிமுத்து, கூட்டுறவு அமைப்புகளின் தலைவா்கள் தெய்வேந்திரன், சின்னை மாரியப்பன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இதேபோல் அமமுகவினா், சிவகங்கை சாலையிலுள்ள கட்சி அலுவலகத்திலிருந்து ஊா்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் மானாமதுரை ஒன்றியச் செயலாளா்கள் சுரேஷ்பாபு, நெப்போலியன், நகா் செயலாளா் வி.என்.சந்திரசேகரன், நிா்வாகி பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதேபோல், திமுக, மதிமுகவினரும் ஊா்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

திருப்புவனத்திலும் அதிமுக மற்றும் திமுகவினா் அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இளையான்குடியில் திமுக மேற்கு ஒன்றியச் செயலா் சுப.மதியரசன் தலைமையில் அக் கட்சியினா், அண்ணா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். நிகழ்ச்சியில் திமுக நகா் செயலா் நஜூமுதீன் மற்றும் நிா்வாகிகள் யாசின், இப்ராகீம், கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT