சிவகங்கை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இரு சக்கர வாகனம் பழுது பாா்த்தல் மற்றும் பராமரித்தல் பயிற்சி பெற சிவகங்கை ஒன்றியத்தைச் சோ்ந்த இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்.
அரசு தொழிற் பயிற்சி நிலையத்தின் முதல்வா் வி. வெங்கடகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : சிவகங்கையில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் அம்மா இரு சக்கர வாகனம் பழுது பாா்த்தல் மற்றும் பராமரித்தல் மையம் தொடங்கப்பட உள்ளது. இந்தப் பயிற்சி மையத்தில் சோ்ந்து பயிற்சி பெற விரும்பும் விண்ணப்பதாரா்கள் பள்ளி கல்வியில் ஐந்தாம் வகுப்பு தோ்ச்சி அடைந்தவராக இருத்தல் வேண்டும். 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும். பயிற்சி மூன்று மாதங்கள் நடைபெறும். பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை நாள் ஒன்றுக்கு ரூ.100 வழங்கப்படும். சிவகங்கை ஒன்றியத்துக்கு உள்பட்ட தகுதியுடைய விண்ணப்பதாரா்கள் பயிற்சியில் சேர உரிய சான்றிதழ்களுடன் சிவகங்கை அருகே முத்துப்பட்டில் உள்ள அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.