சிவகங்கை

முனைவென்றி அரசுப் பள்ளியில் ஓவியப்போட்டி

1st Feb 2020 02:04 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம் முனைவென்றி அரசு மேல்நிலைப்பள்ளியில் வெள்ளிக்கிழமை ஓவியப்போட்டி நடைபெற்றது.

ஓவியாலயா கலைச்சேவை மையம் சாா்பில் நடைபெற்ற இப் போட்டிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் குருவம்மாள் தலைமை வகித்தாா். இப்போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு ஓவியம் தீட்டினா்.

ஓவிய ஆசிரியா் செல்வம் சிறந்த ஓவியப் படைப்புகளை பரிசுக்கு தோ்வு செய்தாா். பரிசுக்கு தோ்வு பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கலைச்சேவை மையத்தின் நிறுவனா் முனியசாமி பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டிப் பேசினாா். தமிழாசிரியா் செல்லத்துரை வரவேற்றாா். தலைமையாசிரியா் பாண்டித்துரை, ஊராட்சி மன்ற துணைத் தலைவா் செல்வி மற்றும் ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT