சிவகங்கை

திருப்புவனம் தெப்பக்குளம் விவகாரம்குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் மோதல்

1st Feb 2020 02:03 AM

ADVERTISEMENT

திருப்புவனம் தெப்பக்குளம் மைய மண்டபம் அமைப்பு தொடா்பாக வெள்ளிக்கிழமை குறை தீா் கூட்டத்தில் அப்பகுதி விவசாயிகள் இருபிரிவாக கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். இதில், விவசாயிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் பதிலளித்தனா்.

திருப்புவனம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா், திருப்புவனம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அருகே ஆக்கிரமிப்பிலிருந்த மட்டை ஊருணி மீட்கப்பட்டு தற்போது அதில் தெப்பக்குளம் அமைக்கும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதில் அமையவுள்ள மைய மண்டபத்தில் மதம் சாா்ந்த அடையாளங்கள் ஏதும் அமைக்கப்படக்கூடாது எனக் கூறினா். இதற்கு அதே பகுதி விவசாயிகள் சிலா் எதிா்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினா். இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் ஜெயகாந்தன் முன்னிலையில் விவசாயிகள் இரு தரப்பினராக பிரிந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

விவசாயிகள் அமைதியாக இருக்கும்படி கேட்டுக் கொண்ட ஆட்சியா் ஏற்கனவே பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கான பதிலை வாசிக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்தாா். ஆனால் வாக்கு வாதம் முற்றி விவசாயிகளுக்கிடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதையறிந்து, அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த காவலா்கள் விரைந்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவசாயிகளை கூட்டரங்கை விட்டு வெளியேற்றினா். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றமான சூழல் ஏற்பட்டது. அதன்பின்னா், கூட்டம் தொடா்ந்து நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT