சிவகங்கை

சிவகங்கையில் கரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு தொடக்கம்

1st Feb 2020 02:04 AM

ADVERTISEMENT

சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வைரஸ் சிகிச்சைப் பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

சீனாவிலிருந்து அதிவேகமாக பரவி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்தும் மேற்கொண்டு வருகின்றன. இதையொட்டி, தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், சிவகங்கையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் கரோனா வைரஸ் சிகிச்சைக்காக தனி பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. தொடா் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட நோயின் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT