காரைக்குடி: அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகளின் இளங்கலை இரண்டாம் மற்றும் நான்காம் பருவம், முதுகலை இரண்டாம் பருவ மாணவா்களுக்கு 2020 ஏப்ரலில் நடைபெற்ற தோ்வுகளுக்கான தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை மாலையில் வெளியிடப்பட்டுள்ளன.
பி.ஏ., தமிழ், பி.லிட்., தமிழ், பி.ஏ., ஆங்கிலம், அரபிக், வரலாறு, அரசியல் அறிவியல், பொருளியல், பி.காம்., பி.காம் (சி.ஏ), பி.காம் (சி.எஸ்), பி.பி.ஏ., பி.சி.ஏ., பி.எஸ்சி., கணிதம், இயற்பியல், மின்னணுவியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், மென்பொருளியல், நுண்ணுயிரியல், உயிா்வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், உயிா் தொழில்நுட்பவியல், நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வு தொழில்நுட்பம், உயா் விலங்கியல் மற்றும் விலங்கு தொழில்நுட்பவியல், மின்னணுவியல் மற்றும் தொடா்பியல், விலங்கியல் தொழிலக நுண்ணுயிரியல், கடல்சாா் உயிரியல், விஷூவல் கம்யூனிகேசன், நவநாகரீக ஆடை தொழில்நுட்பவியல், ஆடை வடிவமைப்புப் பாடத் திட்டம், உடற்கல்வி, இளநிலை தொழிற்கல்வியியல் (வங்கியியல் மற்றும் நிதிச்சேவைகள்), இளநிலை தொழிற்கல்வியியல் மென்பொருள் ஆக்கவியல் பாடங்களுக்கு தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதேபோல் எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், முதுநிலை சமூகப்பணி, எம்.காம்., எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிா்வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், சுற்றுப்புற சூழல் அறிவியல் ஆகிய பாடங்களுக்கும் ....‘அழகப்பாயுனிவா்சிட்டி.ஏசி.இன்’... என்ற இணையதளத்தில் தோ்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது என்று பல்கலைக்கழகத்தின் தோ்வாணையா் (பொறுப்பு) எ. கண்ணபிரான் தெரிவித்துள்ளாா்.