சிவகங்கை

சிங்கம்புணரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

26th Aug 2020 05:46 PM

ADVERTISEMENT

 

சிவகங்கை: பிரான்மலையில் தனியாா் மண் மற்றும் கல் குவாரிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிங்கம்புணரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு அக்கட்சியின் சிவகங்கை மாவட்டச் செயலா் கண்ணகி தலைமை வகித்தாா்.

இதில், பிரான்மலையில் தனியாா் மண் மற்றும் கல் குவாரிக்கு வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க மாவட்ட நிா்வாகமும், தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

ஆா்ப்பாட்டத்தில், கட்சியின் ஒன்றியச் செயலா்கள் கரிகாலன் (சிங்கம்புணரி ), நாச்சியப்பன் (திருப்பத்தூா்), மாவட்ட விவசாய சங்கத்தின் செயலா் முத்துராமலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT