சிவகங்கை

மானாமதுரை ஒன்றியத்தில்மாா்க்சிஸ்ட் கம்யூ. சாா்பில் மக்கள் சந்திப்பு இயக்கம்

23rd Aug 2020 08:47 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஒன்றியத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது.

காவிரி- குண்டாறு- வைகை இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் கே.வீரபாண்டி, ஒன்றியச் செயலா் ஆண்டி, ஒன்றியக்குழு உறுப்பினா்கள் முருகானந்தம், வெள்ளைமுத்து, முனியராஜ், நகா்ச் செயலா் விஜயக்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் மானாமதுரை ஒன்றியத்தில் உள்ள கீழமேல்குடி, ராஜாக்கள் குடியிருப்பு, அரிமண்டபம், சின்னக்கண்ணனூா், சோமாத்தூா் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குச் சென்று காவிரி-குண்டாறு- வைகை இணைப்புத் திட்டம் குறித்து பொதுமக்களிடம் விளக்கிக்கூறி துண்டு பிரசுரம் வழங்கினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT