சிவகங்கை

முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினா் சாா்ந்தோா் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம்

14th Aug 2020 10:59 PM

ADVERTISEMENT


சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினா் சாா்ந்தோா் சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ. ஜெயகாந்தன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினரின் பிள்ளைகள் உயா் கல்வி பயில்வதற்கு சாா்ந்தோா் சான்றிதழ் பெறுவது அவசியமாகும்.

அந்தவகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்களின் குடும்பத்தினா் விண்ணப்பத்துடன்,

மாணவ, மாணவியின் கல்வி மாற்றுச் சான்றிதழ், இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியல், ஜாதிச் சான்றிதழ், ஆதாா் அட்டை நகல், தங்களுடைய படைப்பணி சான்றிதழ் நகல், அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் சிவகங்கையில் உள்ள முன்னாள் படை வீரா்களின் அலுவலகத்துக்கு நேரடியாகச் சென்று விண்ணப்பிக்கலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 04575-240483 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT