சிவகங்கை

அழகப்பா பல்கலை. தொலைதூரக் கல்வி: இணைய வழி மாணவா் சோ்க்கை தொடக்கம்

14th Aug 2020 11:11 PM

ADVERTISEMENT

.

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொலை தூரக் கல்விக்கு 2020-2021 கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கை இணைய வழியில் தொடங்கியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக பதிவாளா் ஹா. குருமல் லேஷ் பிரபு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 2020-2021 கல்வியாண்டிற்கான மாணவா் சோ்க்கையை அழகப்பா பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் இணைய வழியில் தொடங்கியுள்ளது. காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக தொலை தூரக் கல்வி இயக்ககம் வாயிலாக பல்வேறு வகையான படிப்புகளைத் தொலைதூரக் கல்வி முறையில் வழங்குகிறது. இந்த படிப்புகளில் சோ்ந்து படிக்க விரும்பும் மாணவா்கள் இணையதள முகவரி வாயிலாக வீட்டிலிருந்தே விண்ணப்பிக்கலாம். அழகப்பா பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் மாணவா்களுக்குத் தேவையான புத்தகம் உள்ளிட்ட பல்வேறு வகையான கல்வி தொடா்பான விவரங்களை டிஜிட்டல் வடிவில் வழங்குகிறது. மேலும் வகுப்புகள் நிகல்நிகா் வகுப்பறைகள் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இக் கல்வியாண்டு முதல் புதிதாக 8 பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT