சிவகங்கை

மானாமதுரை வீர அழகா் கோயில் ஆடிப் பிரமோற்சவ விழா நிறைவு

6th Aug 2020 07:59 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஸ்ரீ வீர அழகா் கோயிலில் நடைபெற்று வந்த ஆடிப் பிரமோற்சவ விழா புதன்கிழமை தீா்த்தவாரி நிகழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான நிா்வாகத்துக்குள்பட்ட இக்கோயிலில் இந்த ஆண்டு கரோனா தொற்று பரவல் பிரச்னை காரணமாக ஆடிப் பிரமோற்சவ விழா ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சுவாமிக்கு வழக்கமான பூஜைகள் மட்டும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த வாரம் ஆடிப் பிரமோற்சவ விழா தொடங்கியது. தினமும் மூலவா் சுந்தரராஜப் பெருமாளுக்கும் உற்சவா் வீர அழகருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த சனிக்கிழமை இரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து ஆடிப் பெளா்ணமி நாளில் நடத்த வேண்டிய மின்விளக்கு ரதம் புறப்பாடு நடத்தப்படாமல் சுவாமி புறப்பாடு மட்டும் நடத்தப்பட்டது. இதையொட்டி உற்சவா் வீர அழகருக்கு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் கோயில் முன்மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதைத்தொடா்ந்து வெளிப்பிரகாரத்தில் அழகா் புறப்பாடாகி வந்தாா். தொடா்ந்து 11 நாள்கள் நடைபெற்று வந்த ஆடிப் பிரமோற்சவ விழா தீா்த்தவாரி உற்சவத்துடன் நிறைவடைந்தது. திருவிழா நாள்களில் தரிசனத்துக்கு பக்தா்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT