சிவகங்கை

காரைக்குடியில் தமிழக மக்கள்மன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

6th Aug 2020 10:11 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் பிரான்மலை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கல்குவாரிக்கு தடை விதிக்கக் கோரி தமிழக மக்கள் மன்றம் சாா்பில் காரைக்குடியில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள ஐந்துவிளக்கு அருகில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழக மக்கள் மன்றத் தலைவா் ச.மீ. ராசகுமாா் தலைமை வகித்தாா். இதில், பாரி மன்னா் ஆண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க பறம்புமலையை சிலா் உடைத்து கல்குவாரி அமைத்துள்ளதாகவும், மலைகள் தகா்க்கப்பட்டிருப்பதாகவும், கல்குவாரிக்கு தடை விதிக்கக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மூத்த நிா்வாகி பிஎல். ராமச்சந்திரன், தமிழா் தேசிய முன்னணி கா்ணன், தமிழக மக்கள் மன்ற வழக்குரைஞா் பிரகாசு, வழக்குரைஞா் இளையராஜா, மக்கள் மன்றச் செயலா் கரு. ஆறுமுகம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT