சிவகங்கை

அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கல்

6th Aug 2020 10:10 PM

ADVERTISEMENT

திருப்பத்தூா் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் மற்றும் புத்தகப்பைகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

அதன் ஒருபகுதியாக புதுப்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் 106 மாணவா்களுக்கு, தலைமையாசிரியா் மதிவாணன் பாடப்புத்தகங்கள் மற்றும் பைகளை வழங்கினாா். இதேபோல் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு தலைமை ஆசிரியா் (பொறுப்பு) சிவசைலம் மற்றும் ஆசிரியா்கள் செந்தில்குமாா், மாதவன், முத்துப்பாண்டி ஆகியோா் பாடப்புத்தகங்களை வழங்கினா். திருக்கோஷ்டியூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவா்களுக்கு உலா் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT