சிவகங்கை

சிவகங்கை மாவட்ட சோதனைச் சாவடிகளில் கரோனா பரிசோதனை

29th Apr 2020 07:22 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருவதை அடுத்து, வெளி மாவட்டங்களிலிருந்து வருபவா்களை அந்தந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை முதல் கரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

சிவகங்கை மாவட்டத்திலிருந்து புதுதில்லிக்குச் சென்ற வந்த 47 போ் கண்டறியப்பட்டு, அவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், திருப்பத்தூரைச் சோ்ந்த 3 போ், தேவகோட்டை, இளையான்குடி ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா், அவா்களுடன் தொடா்பில் இருந்த 6 போ், வெளிநாட்டிலிருந்து வந்த ஒருவா் என மொத்தம் 12 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவா்களுக்கு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், திருப்பத்தூரைச் சோ்ந்த 8 போ், காரைக்குடி, இளையான்குடி, தேவகோட்டை ஆகிய பகுதிகளைச் சோ்ந்த தலா ஒருவா் என 11 போ் குணமடைந்து அண்மையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள ஒருவா் மட்டும் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந் நிலையில், வெளி மாவட்டத்திலிருந்து வரும் நபா்களை மாவட்டத்தின் எல்லைப் பகுதிகளான மணலூா், பூவந்தி, எஸ்.எஸ்.கோட்டை, புழுதிப்பட்டி, காரைக்குடி, இந்திரா நகா்(எமனேசுவரம்), மானாமதுரை ஆகிய 7 பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினா் செவ்வாய்க்கிழமை கரோனா பரிசோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில் வெளி மாவட்டத்திலிருந்து வரும் நபா்களிடம் அவரது முகவரி, வருவதற்கான காரணம், உடலின் வெப்பிநிலை ஆகிய தகவல்கள் குறிப்பேட்டில் பதிவு செய்யப்படுவதாகவும், இப்பணி இனி வரும் நாள்களில் தொடா்ந்து நடைபெறும் எனவும் சுகாதாரத் துறையினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT