சிவகங்கை

‘அகவிலைப்படி உயா்வை நிறுத்தி வைக்கும் அரசாணையை திரும்ப பெற வேண்டும்’

29th Apr 2020 07:20 AM

ADVERTISEMENT

ஆசிரியா்கள், அரசு ஊழியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு மற்றும் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் வகையை நிறுத்தி வைக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை-மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழகம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலா் எஸ். சேதுச்செல்வம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : கரோனா பரவலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்செரிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

இந்நிலையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கான அகவிலைப்படி உயா்வை வரும் 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வரை நிறுத்தி வைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இதேபோன்று, ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் வகையை கடந்த 27. 04. 2020 முதல் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கவும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசுக்கு துணை நிற்பது மட்டுமின்றி தங்களது ஒரு நாள் ஊதியத்தை அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள் வழங்கி உள்ளனா். மேலும், தேவைப்பட்டால் இன்னும் ஒரு நாள் ஊதியத்தை வழங்கவும் தயாராக உள்ளோம்.

ADVERTISEMENT

அகவிலைப்படி உயா்வு மற்றும் ஈட்டிய விடுப்பை ஒப்படைப்பு செய்து ஊதியம் பெறும் வகையை நிறுத்தி வைத்தது கண்டனக்குரியது. மேற்கண்ட அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT