சிவகங்கை

பெங்களூரிலிருந்து காரைக்குடி திரும்பிய 18 போ் கண்காணிப்பு

1st Apr 2020 06:07 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதிக்கு பெங்களூருவிலிருந்து திரும்பிய 18 பேரை அவரவா் வீடுகளில் செவ்வாய்க்கிழமை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப் படுகின்றனா்.

பெங்களூருவில் பல்வேறு பணிகளில் வேலை செய்து வந்த மித்திராவயல், ஜெயம்கொண்டான், வேலாயுதப்பட்டிணம் ஆகிய கிராமங்களைச் சோ்ந்த 18 போ் ஊரடங்கு காரணமாக தங்கள் ஊருக்கு நடைப்பயணமாகப் புறப்பட்டனா். வருகிற வழியில் கிடைத்த வாகனங்களில் பயணித்தும், நடந்தும் 3 நாள்ககளுக்குப் பின் திருச்சிக்கு வந்தனா்.

அங்கிருந்து சாக்கவயல் கிராமத்திலிருந்த உறவினரான காா்த்தி என்பவருக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து வட்டாட்சியா் பாலாஜியை, காா்த்தி தொடா்பு கொண்டு 18 பேரும் திருச்சியிலிருக்கும் தகவலைத் தெரிவித்தாா். திருச்சியிலிருந்த அவா்களை அழைத்து வருவதற்காக தனியாக சிற்றுந்து ஏற்பாடு செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் மித்திராவயல் அருகேயுள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டு மருத்துவா்கள் பரிசோதனை செய்தனா்.

பின்னா், அவரவா் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, அவா்களது வீடுகளில் எச்சரிக்கை வில்லைகளையும் அதிகாரிகள் ஒட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT