சிவகங்கை

அழகப்பா பல்கலை. மீன்வள அறிவியல் மாணவர்கள் கடற்கரைப்பகுதியில் கள ஆய்வு

22nd Sep 2019 12:22 AM

ADVERTISEMENT


காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக மீன்வள அறிவியல் துறை மாணவர்கள், ஆசிரியர்கள் கடற்கரைப்பகுதியில் களஆய்வு மற்றும் நேரடிப்பயிற்சி பெற்றதையடுத்து வியாழக்கிழமை துணைவேந்தர் நா. ராஜேந்திரனை சந்தித்து விவரங்களை தெரிவித்தனர்.  
அழகப்பா பல்கலைக் கழகத்தில் மீன்வளத்துறை ஆய்வு மற்றும் முதுகலைப்படிப்பு மாணவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் கடற்கரைக்கு கடந்த புதன்கிழமை சென்று மண்டபம் மத்திய மீன்வள ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து கள ஆய்வில் ஈடுபட்டனர். மண்டபம் கடற்கரையிலிருந்து பாம்பன் மேம்பால கடற்கரை வரை வெவ்வேறு இடங்களில் கடற்கரை உயிரினத்தின் திரட்சியை நேரில் கண்டு அதன் முன்மாதிரிகளை சேகரித்தனர்.
இந்த களப்பணி மற்றும் நேரடிப் பயிற்சியின் விரிவாக்கமாக மத்திய மீன்வள அறிவியல் ஆய்வு மையத்துடன் அழகப்பா பல்கலைக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்ய உள்ளது. நேரடிக்களப்பணியின் போது மத்திய மீன்வள ஆய்வு மைய அறிவியல் ஆலோசகர் மற்றும் தலைவர் எம்.ஜெயக்குமார் பல்கலைக் கழக மாணவர்களிடம் கலந்துரையாடினார். இதில் மீன்வள அறிவியல் மாணவர்கள் நேரடி களப்பணி மற்றும் அதன் ஆய்வு மாதிரிகள் எடுக்கப்பட்டது குறித்து பாராட்டுத்தெரிவித்தார்.
களஆய்வு நேரடிப்பயிற்சி முடித்த மீன்வளத்துறை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து களப்பணியின் விவரங்களை தெரிவித்தனர். துணைவேந்தர் நா. ராஜேந்திரன் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களைப் பாராட்டினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT