சிவகங்கை

தேவகோட்டையில் நடந்து சென்றபெண்ணிடம் 9 பவுன் நகை பறிப்பு

22nd Sep 2019 12:21 AM

ADVERTISEMENT


தேவகோட்டையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்ற பெண்ணிடம் 9 பவுன் நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேவகோட்டை நகர் போலீஸார் தேடி வருகின்றனர்.
தேவகோட்டை கைலாசநாதபுரத்தைச் சேர்ந்த கெளசல்யா (55). இவர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயிலுக்கு வெள்ளிக்கிழமை மாலை வழிபடுவதற்காக சென்றுள்ளார். அப்போது,அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் கெளசல்யா கழுத்திலிருந்த 9 பவுன் நகையை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தேவகோட்டை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT