சிவகங்கை

அழகப்பா பல்கலை.யில்  சர்வதேசக் கருத்தரங்கம்

17th Sep 2019 07:23 AM

ADVERTISEMENT

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறை சார்பில் "நிலையான எரிசக்தி மற்றும் சென்சாருக்கான மேம்பட்ட பொருள்கள்' குறித்த இரண்டுநாள் கருத்தரங்கின் தொடக்கவிழா திங்கள்கிழமை நடைபெற் றது.
  விழாவில், துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப்பேசினார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மணிசங்கர் கருத்தரங்கை தொடக்கிவைத்துப்பேசினார். ஜப்பான் தோஹோகு பல்கலைக்கழக இயல் பொருள் அறிவியல் துறை பேராசிரியர் சடோஷி உதா கருத்தரங்கில் முக்கிய உரையாற்றினார். அமெரிக்கா லமர் பல்க லைக்கழக இயந்திரவியல் துறை பேராசிரியர் ரமேஷ் கே. குடுரு மற்றும் பேராசிரியர்கள் பேசினர்.
விழாவில்,150 ஆராய்ச்சிக்கட்டுரைகள் அடங்கிய கருத்தரங்க மலரை துணைவேந்தர் நா.ராஜேந்திரன் வெளியிட அதனை சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக்கொண்டனர். பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் பேராசிரியர் ஜி. மோகன்ராவ், சென்னை இந்திய தொழில்நுட்பக்கழக பேராசிரியர் வி. நடராஜன், சென்னை அண்ணா பல்கலைக்கழக நானோ அறிவி யல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் எம். அரவிந்தன் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்திருந்த பேராசி ரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
விழாவில், முன்னதாக அழகப்பா பல்கலைக்கழக அறிவியல் புல முதன்மையர் கே. சங்கரநாராயணன் கருத்தரங்கின் நோக்கம் குறித்து விளக்கிப்பேசினார். இயற்பியல் துறைத்தலைவர் ஜி. ரவி வரவேற்றுப்பேசினார். முடிவில் உதவிப் பேரா சிரியர் யுவக்குமார் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT