சிவகங்கை

சிவகங்கையில் மின் வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 02:22 AM

ADVERTISEMENT

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கையில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
சிவகங்கையில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் ஏ.கணேசன் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் மாவட்ட செயலர் ஆர்.கருணாநிதி, மாவட்ட பொருளாளர் ஜி.சுப்புராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மண்டலச் செயலர் எஸ்.உமாநாத் சிறப்புரையாற்றினார்.
இதில்,மின் வாரியத்தில் பணியாற்றும் களப்பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்தத்தின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும். வேலை நேரம் 8 மணி நேரம் என்பதை வரையறுக்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 
ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT