சிவகங்கை

சிங்கம்புணரியில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 02:23 AM

ADVERTISEMENT

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து  சிங்கம்புணரி நகர காங்கிரஸார் தெருமுனைப் பிரசாரம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்கம்புணரி பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தெருமுனைப் பிரசாரத்திற்கு சட்டப்பேரவை முன்னாள்  உறுப்பினர் ராம.அருணகிரி, மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, முன்னாள் தலைவர் ராஜரெத்தினம் ஆகியோர் தலைமை வகித்தனர். நிர்வாகிகள் சேவுகமூர்த்தி, தாயுமானவன், இளம்பரிதிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மாவட்டப் பொருளாளர் எஸ்.எம்.பழனியப்பன், அப்பச்சி சபாபதி, சிங்கை தர்மன், இ.எம்.எஸ்.அபிமன்யு, வழக்குரைஞர் கணேசன், ஓய்.பழனியப்பன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 
மேலும், சிங்கம்புணரி வட்டாரத் தலைவர்கள் ஜெயராமன், வீரமணி, திருப்பத்தூர் வட்டாரத் தலைவர்கள் பன்னீர்செல்வம், பிரசாந்த், மற்றும் திருப்பத்தூர், சிங்கம்புணரி நகர ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். பிரான்மலை, வேங்கைபட்டி, பூலாப்பட்டி, மேலப்பட்டி, காப்பராப்பட்டி, காளாப்பூர், திருப்பத்தூர் முறையூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். முன்னதாக நிர்வாகி திருமாறன் வரவேற்றார். நிறைவாக சிங்கம்புணரி நகரத் தலைவர் பழனிவேல்ராஜா நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT