சிவகங்கை

மழவராயனேந்தல் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

4th Sep 2019 07:50 AM

ADVERTISEMENT

திருப்பாச்சேத்தி அருகே உள்ள மழவராயனேந்தல் கிராமத்துக்குச் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
     மதுரை-ராமேசுவரம் சாலையில் திருப்பாச்சேத்தி அருகே மழவராயனேந்தல் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மதுரை-ராமேசுவரம் சாலையிலிருந்து மழவராயனேந்தல் கிராமத்துக்குச் செல்லும் அணுகுசாலை உள்ளது. இந்த சாலை கடந்த சில ஆண்டுகளாக முறையாகப் பராமரிக்காததால் வாகனங்கள் சென்று வர முடியாத அளவுக்கு குண்டும், குழியுமாக மாறிவிட்டது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
     மேலும், கிராமத்திலிருந்து அங்குள்ள கால்நடை மருந்தகம், கிராம சேவை மைய அலுவலகத்துக்கு செல்லும் சுமார் 2 கி.மீ. நீளமுள்ள சாலையும் பழுதடைந்து குண்டும், குழியுமாகக் காணப்படுகிறது. சாலையின் இரு பக்கமும் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. 
     இச்சாலைகளை சீரமைக்கக் கோரி பலமுறை தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 
     எனவே, இச்சாலைகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT