சிவகங்கை

சிவகங்கை அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலம் மீட்பு

4th Sep 2019 07:51 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், கோமாளிபட்டி அருகே செவ்வாய்க்கிழமை உடலில் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்து கிடந்தார்.
      கோமாளிபட்டி அருகே ஒருவர் உயிரிழந்து கிடப்பதாக, சிவகங்கை தாலுகா போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிவகங்கை தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சீராளன் தலைமையிலான போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
     மேலும், சம்பவ இடத்தில் கைரேகை நிபுணர்கள் தடயங்களைச் சேகரித்தனர். 
    காவல் மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.      உயிரிழந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கலாம் என்றும், முகத்தில் பலத்த காயம் இருந்ததால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும், இறந்தவர் குறித்து முழுமையான விவரங்கள் தெரியவரவில்லை என்றும் போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
    இது குறித்து சிவகங்கை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT