சிவகங்கை

கோயில் காளை இறப்பு: கிராம மக்கள் அஞ்சலி

4th Sep 2019 07:50 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் அருகேயுள்ள கட்டுகுடிபட்டி கிராமக் கோயில் காளை செவ்வாய்க்கிழமை இறந்ததை அடுத்து, அதற்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். 
     இக்கிராமத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் கோயிலுக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு காளை ஒன்று நேர்த்திக்கடனாக விடப்பட்டது. கிராம மக்களின் மனதைக் கவர்ந்த இந்தக் காளை, இதுவரை நடைபெற்ற மஞ்சுவிரட்டு மற்றும் ஜல்லிக்கட்டுகளில் ஏராளமான பரிசுகளை வென்று, கிராமத்துக்குப் பெருமை சேர்த்துள்ளது. 
     இந்நிலையில், செவ்வாய்கிழமை திடீரென நோய் வாய்ப்பட்டு கோயில் காளை இறந்தது. அதையடுத்து, கிராமத்தினர் அனைவரும் வேட்டி, மாலை அணிவித்து காளைக்கு மரியாதை செலுத்தினர். இக்காளையின் இறுதி ஊர்வலம் செவ்வாய்க்கிழமை இரவு வெள்ளையம்மாள் கோயிலில் இருந்து புறப்பட்டு, கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, செல்வ விநாயகர் கோயில் அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இதில், கிராம மக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT