சிவகங்கை

காரைக்குடியில் மின்விளக்கு வசதியில்லாத மகாத்மா காந்தி மண்டபம்

4th Sep 2019 07:50 AM

ADVERTISEMENT

காரைக்குடியில் நகராட்சி வெள்ளி விழா ஞாபகார்த்தமாக கட்டப்பட்ட மகாத்மா காந்தி மண்டபத்தில் மின் விளக்கு வசதியில்லாமல் இருளடைந்து காணப்படுவதால், காந்தியவாதிகள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர். 
      காரைக்குடி நகரின் மையத்தில் நகராட்சி வெள்ளி விழா நினைவாக மகாத்மா காந்தி மண்டபம், அன்றைய நகராட்சி அலுவலக ஊழியர்களின் நன்கொடையால் கட்டப்பட்டு, கடந்த 17.7.1955 ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது.
        இந்த மண்டபமானது, கூட்டம் நடத்தும் மேடையாக பல ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. மேலும், காந்தி நினைவு நாள், காந்தி பிறந்த நாள் ஆகிய தினங்களில் அரசியல் தலைவர்கள், காந்தியவாதிகள் இங்குள்ள சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்துவதும் வழக்கம்.
     இந்நிலையில், தற்போது இந்த மண்டபத்தில் மின்விளக்கு வசதி இல்லாமல், இரவு நேரங்களில் இருளடைந்து காணப்படுகிறது. பகல் நேரங்களில் குடிகாரர்களின் கூடாரமாக உள்ளது. 
      இது தவிர, கூட்டங்கள் நடத்தும் திடலாகப் பயன்படுத்தப்பட்டு வந்த பகுதியில், மண்ணை கொட்டிவைக்க நகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளதால், தற்போது இத்திடலின் மகிமையை குறைத்துவிட்டதாக சமூகநல ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர். 
      எனவே, அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜயந்திக்கு முன், நகராட்சி நிர்வாகத்தினர் இந்தப் பகுதியை பார்வையிட்டு, மண்டபத்துக்கு மின்விளக்கு வசதியை ஏற்படுத்தி, முறையாகப் பராமரிக்க வேண்டும் என, காந்தியவாதிகள், சமூகநல ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT