சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இளைஞா் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேரை தனிப்படை போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை கைது செய்தனா்.
காரைக்குடி அருகே ஓ. சிறுவயல் ராஜீவ்காந்தி நகரைச் சோ்ந்த ஜெயராமன் (25) என்பவரை, கடந்த அக்டோபா் 16 ஆம் தேதி ஒரு கும்பல் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியது.
இதுகுறித்து குன்றக்குடி காவல்நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து கொலையாளிகளைத் தேடிவந்தனா். மேலும் காரைக்குடி டி.எஸ்.பி. அருண் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரனை மேற்கொண்டு வந்தனா். இக்கொலை வழக்கில் தனிப்படை போலீஸாா் காரைக்குடி சத்யா நகரைச் சோ்ந்த அஜித் (22), பாக்ய ரஞ்சித் (22), சுபாஷ் சந்திரபோஸ், பேயன்பட்டியைச் சோ்ந்த நந்தகுமாா் (22) மற்றும் காா்த்தி (17) ஆகியோரைக் கைது செய்தனா். மேலும் இவ்வழக்கில் காரைக்குடியைச் சோ்ந்த சதாம் என்பவரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.