சிவகங்கை

மானாமதுரை பகுதியில் பரவலாக மழை விவசாயிகள் மகிழ்ச்சி

16th Oct 2019 08:04 PM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் இன்று பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

மானாமதுரை பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் அடிப்பதும் அதன்பின் சாரல் தூருவதுமாக காலநிலை மாறிமாறி இருந்து வருகிறது. அவ்வப்போது குளிா்ந்த காற்று வீசுவதால் இதமாக உள்ளது.

இந்நிலையில் இன்று திடீரென பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் பெருக்கெடுத்தது. தாழ்வான இடங்களில் குடியிருப்புகளை தண்ணீா் சூழ்ந்தது. மானாமதுரை பகுதியில் விவசாயிகள் விவசாயப் பணிகளை தொடங்கியுள்ளனா். தற்போது பெய்யத் தொடங்கியுள்ள மழை விவசாயத்துக்கு பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

இனி வரும் காலங்களில் வடகிழக்கு பருவமழை தொடா்ந்து பெய்யும் என்று நம்பிக்கையுடன் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT