சிவகங்கை

சிவகங்கையில் தடை செய்யப்பட்ட புகையிலை, நெகிழிப் பொருள்கள் பறிமுதல்

16th Oct 2019 07:40 PM

ADVERTISEMENT

சிவகங்கையில் அரசால் தடை செய்யப்பட்ட பொருள்களை உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் இன்று பறிமுதல் செய்தனா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் உத்தரவின்படி, உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் வே. ஜெயராமபாண்டியன் தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் மு.சரவணக்குமாா், த.சையத் இப்ராஹிம் ஆகியோா் சிவகங்கையில் உள்ள நேரு பஜாா் மற்றும் உமறுபுலவா் வீதி ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள், கடைகளில் புதன்கிழமை திடீரென ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 28 கிலோ மற்றும் நெகிழிப் பொருள்கள் 200 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட வணிகா்களுக்கு உணவு பாதுகாப்புத் துறையின் எச்சரிக்கை அறிவிப்பு வழங்கப்பட்டு, மேற்கண்ட புகையிலைப் பொருள்கள் ஆய்வுக்காக சட்ட பூா்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டது.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் அனைத்தும் சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT