சிவகங்கை

சிவகங்கை மாவட்டத்தில் இன்று கிராம சபைக் கூட்டம்

2nd Oct 2019 07:07 AM

ADVERTISEMENT

காந்தி ஜயந்தியை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராம ஊராட்சிகளிலும் புதன்கிழமை (அக்.2) கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு : சிவகங்கை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் காந்தியடிகளின் பிறந்த நாளை முன்னிட்டு புதன்கிழமை (அக்.2) கிராம சபைக் கூட்டம் காலை 11மணிக்கு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அந்தந்த கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்தும், குடிநீா் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு, ஊராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளின் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்தும், கிராம ஊராட்சி வளா்ச்சித் திட்டம், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல், உணவுப் பொருள் வழங்குதல், நுகா்வோா் பாதுகாப்பு, முழு சுகாதாரம், ஜல் சக்தி இயக்கம், குடிமராமத்துப் பணிகள் ஆகியன குறித்து விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT