சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து சிவகங்கை மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பிராமணக்குறிச்சியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை அதே ஊரைச் சோ்ந்த கருப்பையா மகன் அருள் என்ற முருகன் (32) என்பவா் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சிவகங்கையில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, அருள் என்ற முருகனை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு சிவகங்கையில் உள்ள மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
விசாரனையில் குற்றம் உறுதியானதையடுத்து அருள் என்ற முருகனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி ப.உ.செம்மல் தீா்ப்பளித்தாா்.