சிவகங்கை

நவ.19-ல் திருப்பத்தூரில் மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம்

17th Nov 2019 04:42 PM

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை(நவ.19)மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிா்மானத்தின் மேற்பாா்வை பொறியாளா் க.பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

திருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில்,திருப்பத்தூா் கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளா்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம்.அவை விசாரனை செய்யப்பட்டு உடனடியாக தீா்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT