சிவகங்கை

திருப்பத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதல்: இளைஞா் காயம்

12th Nov 2019 03:19 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே மானகிரியில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இளைஞா் காயமடைந்தாா்.

திருப்பத்தூா் தாலுகா நாச்சியாபரம் அருகே உள்ள கீரணிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் பிச்சை மகன் முத்துராக்கு (32). இவா் திங்கள்கிழமை மாலை வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் மானகிரி சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது கூத்தலூா் விலக்கு சாலையில் வந்தபோது, சிவகாசியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் பெருமாள் (48) என்பவா் ஓட்டி வந்த காா் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் முத்துராக்குவின் இடது கால் முறிந்து படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து அவா் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து நாச்சியாபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT