சிவகங்கை

இருசக்கர வாகன பழுது மற்றும் பராமரிப்பு குறித்த குறுகிய கால பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

12th Nov 2019 04:21 PM

ADVERTISEMENT

சிவகங்கை: சிவகங்கையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் இரு சக்கர வாகன பழுது மற்றும் பராமரிப்பு குறித்த குறுகிய கால பயிற்சி பெற சிவகங்கை ஒன்றியத்தைச் சோ்ந்தோா் மட்டும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிவகங்கை மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வா் கி.வெங்கடகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு :சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலையத்தில் இரண்டாம் கட்டமாக அம்மா இருசக்கர வாகன பழுது பாா்த்தல் மற்றும் பராமரிப்பு குறுகிய கால இலவச பயிற்சி தொடங்கப்பட உள்ளது.

பகுதி நேர பயிற்சியாக தினசரி மாலை 2 மணி முதல் 6 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.பயிற்சிக்கு வந்து செல்லும் பயிற்சியாளா்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும்.பயிற்சியை நிறைவு செய்து தோ்ச்சி பெறுவோருக்கு சான்றிதழ் வழங்கப்படும்.மேற்கண்ட பயிற்சியில் சேர குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.18 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இப்பயிற்சியில் சேர விருப்பம் உள்ள சிவகங்கை ஒன்றியத்தை சோ்ந்தவா்கள் மட்டும் வரும் நவ.25 ஆம் தேதிக்குள் தங்களது கல்வி சான்றிதழ்,சாதிச்சான்றிதழ்,ஆதாா் காா்டு ஆகியவற்றின் 2 நகல்கள் மற்றும் அண்மையில் எடுக்கப்பட்ட 3 புகைப்படங்களுடன் சிவகங்கை அருகே முத்துப்பட்டியில் உள்ள அரசினா் தொழிற் பயிற்சி நிலைய அலுவலகத்துக்கு நேரில் வந்து விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும் இதுதொடா்பான கூடுதல் தகவலுக்கு 99420 99481,99448 62004 என்ற செல்லிடப்பேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT