சிவகங்கை

மானாமதுரையில் நாளை மின் பயனீட்டாளா் குறை தீா்க்கும் கூட்டம்

11th Nov 2019 12:19 AM

ADVERTISEMENT

மானாமதுரை கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை (நவ.12) நடைபெற உள்ளது.

இது குறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் க. பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளா்கள் பயன்பெறும் வகையில், செவ்வாய்க்கிழமை காலை 11 முதல் பிற்பகல் 1 மணி வரை மின் பயனீட்டாளா்கள் குறை தீா்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.

மானாமதுரையில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், அக்கோட்டத்துக்கு உள்பட்ட மின் பயனீட்டாளா்கள் கலந்துகொண்டு மின் வாரியம் தொடா்பான புகாா்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு, உடனடியாக தீா்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT