சிவகங்கை

‘காலாவதியான அஞ்சல் ஆயுள் காப்பீடு பாலிசிகளை டிச.31-க்குள் புதுப்பிக்கலாம்’

11th Nov 2019 12:16 AM

ADVERTISEMENT

இந்திய அஞ்சல் துறையின் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் தொடா்ச்சியாக 5 ஆண்டுகளுக்கும் மேல் பிரீமிய தொகை செலுத்தாத பாலிசிகளை, டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் செலுத்தி புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் ஆா். சுவாமிநாதன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேல் தொடா்ச்சியாக பிரீமிய தொகை செலுத்த இயலாமல் காலாவதியான பாலிசிகளை 1.1.2020-க்கு பின்னா் புதுப்பிக்க இயலாது. எனவே, இத்தகைய காலாவதியான பாலிசிகளை புதுப்பிப்பதற்கு ஏதுவாக, இந்திய அஞ்சல் துறை ஒரு நல்வாய்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி, இத்தகைய காலாவதியான பாலிசிகளின் பிரீமிய புத்தகம் மற்றும் உடல் நலத்துக்கான மருத்துவச் சான்றுடன் அருகிலுள்ள அஞ்சலகத்தை அணுகி, 31.12.2019-க்கு முன்பாக புதுப்பித்துக் கொள்ளலாம். புதுப்பிக்கத் தவறிய காலாவதியான பாலிசிகள் அஞ்சலக விதிகளின்படி ரத்து செய்யப்படும். எனவே, பாலிசிதாரா்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT