சிவகங்கை

திருப்பத்தூா் அருகே பூட்டிய வீட்டில் 9 பவுன் நகை, பணம் திருட்டு

9th Nov 2019 06:52 AM

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே வெள்ளிக்கிழமை பூட்டியிருந்த வீட்டில் கதவை உடைத்து 9 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

திருப்பத்தூா் அருகே உள்ள ஊா்குளத்தான்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் சேது. இவரது மனைவி முத்துலெட்சுமி. சேது ஆடுகள் மேய்த்து வருகிறாா். முத்துலெட்சுமி நூறு நாள் வேலைக்கு சென்று வருகிறாா். வெள்ளிக்கிழமை காலையில் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனா். மாலையில் வேலை முடிந்து முத்துலெட்சுமி வீட்டிற்கு வந்துள்ளாா்.

அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது. வீட்டின் உள்ளே இருந்த பீரோ கதவுகள் உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருள்கள் சிதறி கிடந்துள்ளன. பீரோவில் இருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடுபோனது தெரியவந்தது. இதனையடுத்து முத்துலெட்சுமி அளித்த புகாரின்பேரில் கண்டவராயன்பட்டி காவல் நிலைய போலீஸாா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்வையிட்டு வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT